search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்
    • மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சாமி சமேத வள்ளி, தெய்வானை கோவில் அமைந்துள்ளது.

    ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இயற்கை எழில் மிகுந்த இக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜலகா ம்பாறை நீர்வீழ்ச்சிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.

    தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நேற்று நீர்வீழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறபள்ளி அடுத்த புகையிலைக்காரன் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான படை வீரர்கள் விரைந்து சென்று நாக பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

    • அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது
    • 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள, கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை தொ டர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை திருப்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    ஆலங்காயம் பஸ் நிலையம் முதல் ராஜபா ளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலை, வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது
    • கோட்ட செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வாணியம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிபட்டு, ஏலகிரிமலை, அம்பலுர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், ஆலங்காயம் துணை மின் நிலையயத்தில் உள்ள ஆலங்காயம், வெள்ளகுட்டை, பூங்குளம், நரசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், திம்மாம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளர் பாஷா முகமது தெரிவித்துள்ளார்.

    • அரசு பஸ்சை சிறை பிடித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் கத்தரியில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் குவிந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • வாகன தணிக்கையின்போது சிக்கியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் இன்று காலை ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரியை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர், லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    போலீசார் லாரியை பரிசோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரிந்தது.

    இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

    ஜோலார்பேட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 36). இவரது மனைவி சத்தியா (32). இவர்களுக்கு லித்திக்ஷா (6) என்ற மகளும், நிவின் (3) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கலைமணி கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் நேற்று இரவு சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தொரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

    இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்

    நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

    இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் குப்பையில் உணவு பொருட்களை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளனர். அதில்,

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், கம்பெனி சிப்ஸ் வகைகள், டூத் பேஸ்ட், குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொ ருட்கள் ஏராளமான பாக்கெட்டுகள் கிடந்தன.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை எடுத்து செல்ல அருகே சென்று பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. எனவே,' அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.

    அவ்வழியாக செல்லும் குழந்தைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள அந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    மேலும், காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் வீசி சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் சின்ன ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 64). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்கள் இருவரும் பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக இன்று காலை கடைக்கு சென்றனர்.

    சாலையில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சீனிவாசன் பிரேக் போட்டார். அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி பாபு கீழே விழுந்தார். இதில் பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருட்கள் தீயில் கருகி நாசமானது
    • தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் தயாநிதி என்பவரின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்துள்ளது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

    இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×