search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தூய்மை பணியாளர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த சில ஆண்டுகளாக புலவர்பள்ளி பகுதியில் கொட்டி அங்கு பிரித்து வந்தனர்.

    குப்பைகளை பிரித்து எருவாக்கும் வகையில் பயோ மெட்ரிக் செய்யாமல் அங்கு குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும்,பல்வேறு மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 10 நாட்களாக குப்பைகள் அங்கு கொட்டகூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்க கடந்த 15 நாட்களாக வரவில்லை என்றும் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல தூய்மை பணியாளர்கள் வராமல் தெருக்கள்,சாலைகள்,கழிவு நீர் கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் பரவி குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    மேலும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி பிரிப்பதற்கு புலவர்பள்ளி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கு குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்க குப்பைகிடங்கு கட்டுவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கு இதுவரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள கோமுட்டேரி என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் இடம் தேர்வு செய்து அங்கும் குப்பைகள் பிரித்து உரம் தயார் செய்வதற்கு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அங்கும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரும்பு ராடால் சரமாரி தாக்குதல்
    • கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைத்து அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைப் குடிநீர் குழாய் உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்ப ள்ளி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியபோது விபரீதம்
    • தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மயிலா (வயது 60). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது குடிசை வீட்டின் மேலே மின் ஒயர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் லேசான காற்று அடித்தது. அப்போது மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்தது.

    குடிசை தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    • 120-ம் ஆண்டு அனுசரிப்பு
    • ஆங்கிலேய அரசு நினைவு தூண் நிறுவியது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல ஏரிகள் நிரம்பி உடைந்து கரையோர கிராமங்களை அடித்து சென்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதன் நினைவாக அப்போதைய ஆங்கிலேய அரசு வாணியம்பாடி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பாக அந்த இடத்தில் ஒரு நினைவு தூண் நிறுவியது.

    அந்த நினைவு தூணில் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி 120-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்ரமணியன், பாலாறு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

    • 2 பேர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). கம்பி கொல்லையை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (21), சந்தோஷ் (25). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் வந்த அரவிந்தனை, சந்தோஷ் மற்றும் மணிகண்டன் வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து அரவிந்தனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கத்தியால் குத்திய மணிகண்டன், சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தந்தையுடன் பட்டாசு வாங்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நேபாளத்தை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 30). இவா காவலாளியாக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் அருகே உள்ள சோலூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் விமல் குமாரின் மகன் விஷால் (7) பட்டாசு வாங்கி தரும்படி கேட்டார். அதன்படி விமல் குமார் மகன் விஷாலை கடைக்கு அழைத்துச் சென்று பட்டாசுகளை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் தந்தை மகன் 2 பேரும் வீட்டுக்கு செல்லும்போது, ஆலங்குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில் சிறுவன் விஷால் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே நடந்த சம்பவத்தை பார்த்து விமல் குமார் கதறி அழுது துடித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தந்தை கண் முன்னே மகன் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கண்காணிப்பு கேமராக்களை திருப்பி விட்ட மர்மகும்பல்
    • கதவை உடைத்து துணிகரம்

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 44). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி கனிமொழி. மகள், மகன் உள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான வீடு திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டியில் உள்ளது. இந்த வீட்டை மாமியார் (துளசி 50) என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு துளசி, சந்திரன் வீட்டின் மின் விளக்கை போட்டு விட்டு அவரது வீட்டுக்கு தூங்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை துளசி சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தி இருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வழக்கு பதிவு

    அப்போது அந்த கேமராக்கள் திரும்பிய நிலையில் இருந்தது. கொள்ளையர்கள் தங்கள் முகங்கள் பதிவு ஆகிவிட கூடாது என்பதற்காக கேமராக்களை திருப்பி வைத்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • நீட் தேர்வுக்கு எதிராக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்
    • ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனது கையெழுத்திட்டு, நீட் க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொது மக்கள், மாணவர்கள், திமுக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.

    பின்னர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்.ஞானவேலன் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு மற்றும் பணமுடிப்பு என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அவைத் தலைவர் ராமநாதன், துணை செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பொன்னம்பலம், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் பீதி
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது.

    இதில் முருகன் குட்டை மற்றும் கீழ் குட்டை கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    கீழ் குட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்துக் குதறியது. அதேபோல் நேற்று இரவும் முருகன் குட்டை பகுதியில் நுழைந்த சிறுத்தை பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை கடித்து குதறியுள்ளது.

    ஆடுகளை சிறுத்தை கடித்து குதறும் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடம் காட்டு தீப்போல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் அச்சைமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
    • 50 பவுன் நகை அபேஸ்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த தாயப்பன்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) ஸ்டூடியோ உரிமையாளர். இவரது மனைவி ரம்யா (32) . இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் டைப்பிஸ்டாக உள்ளார்.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றனர். அன்று மாலை பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மர்ம கும்பலை பிடிக்க எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.

    அதன் பேரில் நேற்று தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையலறை யில் 47 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரம்யாவிடம் விசாரித்தபோது, நாங்கள் திருமணத்திற்கு சென்று விட்டு வந்து இந்த நகை களை சமையலறையில் வைத்திருந்ததாக கூறினார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகள், பணம் திருட்டுபோனதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நகை திருடியவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர்.

    மேலும் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×