என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அறுந்து விழும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்
- மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்
- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழையாலும், காற்றாலும் அறுந்து விழும் மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
மின்கம்பம், அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளி, மரங்கள், மின்கம் பங்கள், மின்கம்பிகள் அடியில் செல்லக்கூடாது. கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.
மின்கசிவுகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க உதவும் ஆர்.சி.சி.பி.யை வீடு, கடை, கோவில், பள்ளிகளில் பொருத்த வேண்டும். டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை மின்பாதை அருகில் நிறுத்தி வைக்கக்கூடாது.
கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின்மாற்றி, மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளர் களை தவிர வேறுயாரும் ஏறக்கூடாது.
விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கக்கூ டாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் அருகில் செல்லக்கூடாது. மின்ஒயர் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு அல்லது மின்தடை புகார் மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.