search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை
    • ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள், சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் வழி யாக செல்லும் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகின்றனர்.

    சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஆபத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண்களை பாது காப்புடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    அதிவிரைவு ரெயில்கள், விரைவு ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் பயணம் செய்வதாகவும் புகார் இருந்தது.

    அதன் பேரில் முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு நடத்தி அதில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள், தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தினர்.

    ரெயிலில் சந்தேக படும்படி யாராவது நடந்து கொண்டால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதேபோல் ரெயிலில் உடன் பயணிக்கும் அடையாளம் தெரியாத பயணிகளிடம் இருந்து உணவு பொருட்கள், தின்பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவர்களை வாங்கி சாப்பிட வேண்டாம். பாதுகாப்பான தீபாவளி அனைவரும் கொண்டாட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    • தி.மு.க. சார்பில் நடந்தது
    • பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி மாணவர் அணியினர் புதுப்பேட்டை சந்தை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ. வடிவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வேளாண் குழு தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சித் பிரதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி அறிவுறுத்தலின் படி ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், நகர துணை செயலாளர் ஆ.சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், நகர பொருளாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் சந்தை கோடியூர் பகுதியில் நீட் தேர்வு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வ.வடிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ், சி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் காளியப்பன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
    • உதயேந்திரம் பேரூராட்சி பள்ளியில் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் ஊராட்சியில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கீதா பாரி (ஆலங்காயம்), சுரேஷ் குமார் (மாதனூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி சப் - கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

    முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித் தொகை, களை எடுக்கும் கருவி, உளுந்து விதை, ஊட்டசத்து பெட்டகம், வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 578 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா (இளையநகரம், காந்திமதி (மேல்குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் சம்பங்கி, கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    • மனைவி உள்பட 2 பேர் கைது
    • கணவன்- மனைவிக்கு இடையே தகராறு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் யாழரசன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவரது 2-வது மனைவி பிரதீபா (39). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்க ளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாழரசன் பிரதீ பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு பிரதீபா சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் யாழரசன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மனைவி பிரதீபாவிடம் இங்கு ஏன் வந்தாய் என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரதீபாவின் அண்ணன் திருப்பதி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று யாழரசிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது அண்ணன் திருப்பதி ஆகியோர் சேர்ந்து அருகே இருந்த கட்டையை எடுத்து யாழரசனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் யாழரசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் யாழரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீபா மற்றும் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஏடிஎஸ் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 40 வருடமாக சுடுகாடு இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக புதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்வது வந்தனர்.

    இந்த நிலையில் ஏடிஎஸ் காலனியை சேர்ந்த முருகன் (வயது 62). தொழிலாளி என்பவர் உடல்நல குறைவால் இறந்து விட்டார்.

    அவரை புதைப்பதற்காக புதூரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு புதைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஏடிஎஸ் காலனியை சேர்ந்த பகுதி மக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா ண்டேஸ்வரி என்பவர் தனது வீட்டின் அருகே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்

    சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே தோழர் கவுண்டர் தெருவில் கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் பின்புறம் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்று கொண்டு வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் 2 பாம்புகளை விட்டனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே காதர்பேட்டை கவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகன் அம்ஜத் பாஷா (வயது 29) இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அம்ஜத் பாஷா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ஜத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்
    • டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது

    ஆம்பூர்:

    ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடை கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி செல்கின்றனர்.

    பனிபொழிவால் அப்பகுதியில் உள்ள மலைகளை சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகிறார்கள்.

    சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்தி விட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்ப டுகிறார்கள்.

    பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக மாகவே காணப்படுகிறது.

    • ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது
    • மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது

    ஜோலார்பேட்டை:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய பேச்சு போட்டிகள் தனித்தனியே நடந்தது.

    இதில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் வேல்முருகன் காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    இவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ரவி உதவி தலைமை ஆசிரியை எஸ். அருள்செல்வி, முதுகலை ஆசிரியை ஆர். சாய்ரா பானு, முதுகலை ஆசிரியர் ஸ்ரீ மாதேஷ், உடற்கல்வி ஆசிரியர் எம். மதன்குமார், தமிழ் ஆசிரியர் சி. மாதேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×