search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு நீதி நாள் முகாம்
    X

    மனு நீதி நாள் முகாம்

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் ஊராட்சியில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கீதா பாரி (ஆலங்காயம்), சுரேஷ் குமார் (மாதனூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி சப் - கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

    முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித் தொகை, களை எடுக்கும் கருவி, உளுந்து விதை, ஊட்டசத்து பெட்டகம், வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 578 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா (இளையநகரம், காந்திமதி (மேல்குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் சம்பங்கி, கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×