search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • விவசாய நிலத்தில், கோவிந்தராஜ் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38), கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி காளீஸ்வரி (32). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இன்றுகாலை விடிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கோவிந்தராஜ் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர். தாக்கப்பட்ட கல்லும் கோவிந்தராஜ் பிணத்தின் அருகில் கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சத்தம் கேட்பதால் மக்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர்
    • உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணூர் பகுதியில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அந்த இடத்தில் அதிகளவு பாறைகள் இருப்பதால் டிராக்டர் கம்ரஷர் மூலம் துளையிட்டு அதனை வெடிவைத்து தகர்க்கும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் அவ்வப்போது திடீரென வெடி சத்தம் கேட்பதால், அந்த பகுதி மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் அங்குள்ள வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெத்தகல்லுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மேனகா அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று, அனுமதியின்றி பாறைகளுக்கு வெடி வைக்க துளையிட பயன்படுத்திய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் வீட்டுமனையின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் குறித்து விளக்கம்
    • உணவுப் பொருட்களை பாதுகாக்க வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மனிதவளமேம்பாட்டு அலுவலர் முனிராஜ், சுகாதார மேற்பார்வை யாளர் முத்துக்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் கலந்து கொண்டு, பயிற்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளின் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு சமைக்கப்படும் உணவுகள் எவ்வாறு சமைக்க வேண்டும், உணவுப் பொருட்களை பாதுகாப்பது எப்படி, சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள பொதியன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது வீட்டு வாசலில் இன்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சென்று, மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.





    வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

    ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குப்பட்ட நாய்க்கனூர் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகருக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் மேலா திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் தேசிய உணவு திட்டத்தின் ஆலோசகர் வாசுதேவரெட்டி. ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவிதவள்ளி, வேளாண்மை அலுவவர் சோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத் தலைவர் தமிழ்செல்வி ஜோதிலிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.

    • மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்பு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் ரூ.3.கோடி மதிப்பீட்டிலான சிறு விளையாட்டு அரங்கத்தை அமைக்க முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் எம்.எல். ஏககள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் வரவேற்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் சங்கிதாபாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய கவுன்சிலர் ப்ரித்தாபழனி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ. ராஜிவ் தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அரசு அலுவலகங்களில் கையூட்டு பெறும்போது பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் நகராட்சி ஆணையாளர் ஜி. பழனி, நகராட்சி பொறியாளர் பி. சங்கர், மேலாளர் இளவரசன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்கு ப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி குணவதி (வயது 52) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணவதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த குணவதியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குணவதி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
    • கைதானவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த காரப்பட்டு அபிகிரி பட்டறை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). கதவாளம் பகுதியில் பாஸ்புட், டிபன் கடை நடத்தி வருகிறார்.

    கதவாளம் பகுதியை சேர்ந்த ராஜு (21), அஜித் குமார் (27) என்பவர்கள் சுபாஷ் கடைக்கு சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

    அப்போது சுபாஷிடம் ரைசை ஆர்டர் செய்தனர். ரைஸ் வருவதற்கு சிறிது நேரம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ மற்றும் அஜித் ஆகியோர் சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவரை சரமாரியாக தாக்கி கடாயில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தூக்கி சுபாஷ் மீது ஊற்றினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து சுபாஷ் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் அஜித்தை கைது செய்தனர். மேலும் கைதான வாலிபர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆலங்காயம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்வதால் அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம், கடும் மோதல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து 2 பேரும் வாணியம்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரும் ஆலங்காயம் போலீசில் தனிதனியாக புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் ஞானம் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகர் (வயது 40), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), பார்த்திபன் (40), திருப்பதி (32) ஆகிய 4 பேர் மீதும் ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

    நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், ஆலங்காயம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் வி.வி.கிரிராஜ், ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம்

    திருப்பத்தூர்:

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்தலை நடைமுறைப்படுத்தும் வகையில், 'நடப்போம் நலம் பெறுவோம்' எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

    அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்ள நடைபாதைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் நாளை 4-ந் தேதி காலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நடைப்பயிற்சி நடைபெறஉள்ளது.

    அடிப்படை வசதிகள்

    இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறியதாவது:-

    கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கும் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி தூயநெஞ்சககல்லூரி மற்றும் பாச்சல் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக அச்சமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலை சென்று, பாச்சல் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே முடிவடைகிறது. அந்த வழித்தடத்தில் குடிநீர், கழிவறை, அமருவதற்கு சாய்வு நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×