search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
    • படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்கள் தனித்தனியாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மினி லாரி வைத்து ஏற்றி சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தாக்(வயது 28) இவர் அதே பகுதியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு வெளியே சாமான்களை வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் மாயமானது.

    இதனால் அதிர்ச்சியடைந்த முகமது முஸ்தாக் அங்கு விசாரித்த போது சமையல் பாத்திரங்களை மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் என்பர் மினி லாரி வைத்து ஏற்றி சென்றது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து முகமது முஸ்தாக் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு வழக்கு பதிவு செய்து நதீமை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்து செய்தனர்.

    • குப்பைகளை எரித்த போது பரிதாபம்
    • அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியா ங்குப்பத்தை சேர்ந்தவர் மார்கன் (வயது 80). இவரது வீட்டின் அருகே ஏராளமான குப்பைகள் இருந்தது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்தது. நேற்று மாலை சேகரித்து குவியலாக வைத்தார். பின்னர் தீ மூட்டி குப்பைகளை எரித்தார். அப்போது மார்கன் அணிந்திருந்த வேட்டியின் மீது திடீரென தீப்பொறி வேகமாக எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மார்கன் மீது எரிய தொடங்கிய தீயை அணைக்க முயன்றனர். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக மார்கன் இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்கன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கோயம்புத்தூர், சாமய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 37), தனியார் கம்பெனி காசாளர். இவரது மனைவி பிரேமலதா (30). தம்பதியினருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் செந்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கோவையில் இருந்து சென்னை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரப்பிசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் செந்தில் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டயர் வெடித்து விபத்து
    • 4 பேர் உயிர் தப்பினர்

    ஆலங்காயம்:

    சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 3 இளைஞர்கள் பெங்களூ ரில் உள்ள அதே நிறுவனத்தின் கிளைzக்கு அலுவலக பணிக்காக கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர்.

    காரை சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 57) என்பவர் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிக்கட்டு ஓடி 2 முறை பல்டி அடித்து, குப்புற கவிழ்ந்து.

    இதில் காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக சிறு காயமும் இன்றி உயிர்தப்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதித்தது.

    தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் காரை கிரேன் மூலம் அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார்
    • போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் குறைகளைக் கேட்டனர்.

    அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கலெக்டரை பார்த்து இங்கு நடைபெறும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் மன்னிப்பு கேட்டு அலப்பறை செய்தார்.

    இதற்கு மாவட்ட ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார். பின்னர் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியரிடம் கையை பிடிக்க சென்ற அந்த மது போதை வாலிபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்லவநாதன் முன்னிலை வகித்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எழுந்து நின்று தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கும் பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    எங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலை வர கூடாது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அவர் கண்ணீர் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி மாவட்ட வேண்டுகோள் வைத்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தை திருமணம் செய்வது கூடாது அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தை திருமணம் நடத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள், திருமண விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள், என அனைவரின் மீதும் வழக்குபதிவு செய்யப்படும்.

    அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெண் சிசு பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்வகின்றனர்.

    இதனால் பெண் பிள்ளைகள் பிறப்பு குறைவாக உள்ளதாகவும் அதற்கு துணை போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி,சப் கலெக்டர், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்
    • வேலை கிடைக்காததால் விரக்தி

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 28). வருகிற 19-ந் தேதி நவீன் குமாருக்கு திருமண நடைபெற இருந்தது.

    இதனால் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். தனக்கு திருமணம் நடைபெற இருந்ததால் தன்னை நம்பி வரும் பெண்ணிற்காக நவீன் குமார் வேலை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் வேலை கிடைக்காததால் திருமணம் ஆனபின் மனைவியை எப்படி காப்பாற்றுவது என விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை கேதாண்டப்பட்டி யார்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக சென்னை- மைசூர் செல்லும் ரெயில் முன் திடீரென பாய்ந்தார்.

    இதில் நவீன் குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    மேலும் வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலை கிடைக்காததால் திருமணமான பின்பு மனைவியை எப்படி காப்பாற்றுவது என்ற விரக்தியில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தேடுதல் வேட்டை
    • 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்தி (வயது 58) இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 20 வருட காலமாக சிறுக சிறுக இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதிக்கு வந்தார்.

    அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்

    சக்தி ஆசிரியர் நகர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த 6 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

    ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் அருகே உள்ள பெயிண்ட் கடையில் உள்ள கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சாலையில் நடந்து சென்றுதும்.

    அருகில் நின்று கொண்டு இருந்த 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றது பதிவாகி உள்ளது. இதன் மூலம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாகன தணிக்கையில் சிக்கினர்
    • பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கூவல் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மாட்டியிருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய்விட்டதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் வாணியம்பாடி - ஆலங்காயம் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 21), குபேந்திரன் (19), பாலாஜி (21) என்பதும், கூவல் குட்டை பகுதியில் மின்மோட்டார் திருடியதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.

    • இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
    • பஸ் மோதி 2 பேர் இறந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.

    இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.

    ×