என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்
- வேலை கிடைக்காததால் விரக்தி
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 28). வருகிற 19-ந் தேதி நவீன் குமாருக்கு திருமண நடைபெற இருந்தது.
இதனால் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். தனக்கு திருமணம் நடைபெற இருந்ததால் தன்னை நம்பி வரும் பெண்ணிற்காக நவீன் குமார் வேலை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் வேலை கிடைக்காததால் திருமணம் ஆனபின் மனைவியை எப்படி காப்பாற்றுவது என விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை கேதாண்டப்பட்டி யார்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக சென்னை- மைசூர் செல்லும் ரெயில் முன் திடீரென பாய்ந்தார்.
இதில் நவீன் குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை கிடைக்காததால் திருமணமான பின்பு மனைவியை எப்படி காப்பாற்றுவது என்ற விரக்தியில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் தேடுதல் வேட்டை
- 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்தி (வயது 58) இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 20 வருட காலமாக சிறுக சிறுக இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதிக்கு வந்தார்.
அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்
சக்தி ஆசிரியர் நகர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த 6 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அருகே உள்ள பெயிண்ட் கடையில் உள்ள கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சாலையில் நடந்து சென்றுதும்.
அருகில் நின்று கொண்டு இருந்த 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றது பதிவாகி உள்ளது. இதன் மூலம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாகன தணிக்கையில் சிக்கினர்
- பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை
ஆலங்காயம்:
ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கூவல் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மாட்டியிருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய்விட்டதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி - ஆலங்காயம் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 21), குபேந்திரன் (19), பாலாஜி (21) என்பதும், கூவல் குட்டை பகுதியில் மின்மோட்டார் திருடியதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.
- இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
- பஸ் மோதி 2 பேர் இறந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.
- ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது
- அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே மொலகாரம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதனால் மொல காரம்பட்டி - குனிச்சி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்க ப்பட்டது. தண்டவாளத்தை கடந்து செல்லும் மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அலட்சியமாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
தண்டவாளத்தை கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- புதிய பைப் லைன் அமைக்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இம்மலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமம் மோட்டு காடு வட்டத்தில் வசித்து வரும் குடும்பங்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தொடங்கி வைத்தார்.
அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பொருட்கள் எரிந்து நாசமானது
- 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.
அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்று கட்சியினர் 300 பேர் இணைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நகர செயலாளர் கோபிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
நகர அவைத்தலைவர் சஜாத் உசேன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோ.சுரேஷ் பாபு கலந்து கொண்டு பேசினார்.
மேலும் நிகழ்ச்சி முடிவில் இ.பி.ஸ். அணி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சினர் சுமார் 300 பேர் தங்களை ஒ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், நகர பொருளாளர் எம்.பிரகாஷ் ,நகர இணைச் செயலாளர் ராபியகவுஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சலீம், சரிதாபாஸ்கர், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் ஆதில் அஹமத், அவைத்தலைவர் அத்தாவுள்ளா, துணை செயலாளர் நசீர் அகமது, இணைச் செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் நஸ்ருல்லா, பாசரை நகர செயலாளர் பயாஸ் அகமத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை
- வாகனங்களை கலெக்டர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை 1 நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி இன்று காலை சுற்றுலா சென்ற வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- போலீசார் ரோந்து
- மது பாக்கெட்கள் பறிமுதல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீசார் முருகன் சினிமா தியேட்டர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி கள்ளத்தனமாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் பாவடை தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து மது பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தி.மு.க. நகர செயலாளர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், நகர மன்ற துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன், நகர அவைத் தலைவர் இரா. மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ஆ. சுரேஷ், மாவட்ட பிரதிநிதி பு. பாஸ்கர் நகர பொருளாளர் த. இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதன செய்து கொண்டனர்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்