என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு எடுத்து சென்றனர்
- கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற சரவணன் (23). இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து 23 அட்டை பெட்டிகளில் காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கந்திலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்று காலை கந்திலி போலீசார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரு வில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராம்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை வசூல்
- உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை
ஆலங்காயம்:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்பிளாசா அருகில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வேலூர் துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன்( வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி சொகுசு பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.
வழக்கமாக ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை கூடு தலாக அதிக கட்டணம் வசூல் செய்து வந்ததும்,சரக்கு வாகனங்கள் போல் பஸ்சின் மீது பொருட்கள் ஏற்றிச் சென்றது, சுற்றுலா வாகனம் என அனுமதி பெற்று பயணிகளை ஏற்றி பயன்படுத்தி வந்தது என அனுமதிக்கு புறம்பாக இயக்கி வருவது கண்டறியப்பட்டது. 4 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மீதான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் பீதி
- ஆந்திர வனதுறையினருக்கு தகவல்
ஆலங்காயம்:
தமிழக எல்லையான ஆந்திர மாநிலம் குப்பம் அருகே வனப்பகுதி உள்ளது. நாயனூர் - பெரிய வளைவு சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாடுவதை தங்கள் செல்போன் மூலம் பதிவு செய்தனர். அதனை சமூக வலைதள ங்களில் பதிவிட்டு ள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பொது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆந்திர வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்து றையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் சிறுத்தை தமிழக எல்லைக்குள் புகுந்துள்ளதா? ஆந்திரா எல்லைக்குள் புகுந்ததா என கண்காணித்து வருகின்றனர். தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி, பெத்த வங்கா பகுதிகளுக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமே உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை நடமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சாய்பாபா தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 35). தொடப்பம் வியாபாரி. இவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் விஜயா பல்வேறு இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வியாபாரியை தேடி வருகின்றனர்.
- வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார்
- உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ஷாமிலா (வயது 26) என்கின்ற மனைவியும் தியாஸ்ரீ (வயது 5), ஜெயசுகன் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
அப்போது நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மனைவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை.
இதனால் கார்த்திக் தனது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனால் கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது
- போலீசார் வலை வீச்சு
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இதன் அருகே மற்றொரு கல்குவாரி உள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் அருகே கல்குவாரி நடத்தி வரும் 27 வயதுடைய வாலிபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மின்னூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகே இருந்தவர்கள் படுகாயம் அடைந்த வரை மீட்டு வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெங்கடேசன் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- ஆந்திரா -தமிழக எல்லையில் அட்டகாசம்
- அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்
ஜோலார்பேட்டை:
ஆந்திரா மாநிலம் ராமாகுப்பம் மண்டலம் கொல்லப்பள்ளி பகுதி உள்ளது. இதன் அருகே வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்தில் காட்டு யானைகள் புகுந்துள்ளது.
மேலும் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை காட்டு யானைகள் மிதித்து நாசம் செய்தன.
கிணற்றின் அருகே இருந்த குழாய்களை உடைத்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.
அப்போது அந்த யானைகள் அப்பகுதி மக்களை துரத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பட்டாசுகளை வெடித்து சத்தம் எழுப்பி அதனை வனப் பகுதிக்குள் துரத்தினர்.
பின்னர் இது குறித்து ராமா குப்பம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி சென்றதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
- இனிமேல் தவறுகள் நடக்காது என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் சசிதரன் (வயது 5).
இவர் ஏலகிரி மலையில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் மங்களம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றிச் செல்ல நின்றது.
அப்போது மாணவர்கள் வாகனத்தில் ஏறிக் கொண்டு இருந்தனர்.
அப்போது டிரைவர் வாகனத்தின் கதவை சரியாக அடைக்கவில்லை. அதற்குள் வாகனத்தை இயக்கியதால் கதவு அருகே அமர்ந்து இருந்த சசிதரன் தவறி கிழே விழுந்தான். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனால் அப்பகுதி பொது மக்கள் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது என கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார்.
- வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ஜமுனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார். இதே போல் வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.
வாத்துகள் வெங்கடேசன் வளர்க்கும் கோழிகளை கொத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சிலம்பரசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கோழி, வாத்துகள் சம்பந்தமாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சிலம்பரசன் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாத்து, கோழி தகராறில் நடந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெற்றோர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
- போலீசாரின் பேச்சுவார்தையடுத்து கலைந்து சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சாந்தி மாணவிகளை துன்புறுத்தி வருவதாக கூறியதால், ஆத்திரம் அடைந்த மாணவி களின் பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை பள்ளி வந்த மாணவிகள் தலைமை ஆசிரியை மீது தவறான புகார் கொடுத்துள்ள தாகவும், அவருக்கு ஆதரவாக பெற்றோர்களை கண்டித்து பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி களிடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் சமரசம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் கொள்ளை கொட்டாயை சேர்ந்தவர் வேலு (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 30 ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அதிலிருந்த ஒரு ஆடு திடீரென அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்றுவதற்காக வேலு கிணற்றில் குதித்தார்.
அப்போது கிணற்றின் மூழ்கி பக்கவாட்டில் மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். வேலு கிணற்றில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். முடியாததால் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர்.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணி கைவிடப்பட்டது. மேலும் அதிகாலை தீயணைப்புத் துறையினர் வந்து சிறிது நேர தேடலுக்குப் பிறகு வேலு உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
- கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதிகள் இல்லை.
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த மலை கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் மலை காடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.
மலையில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் யாராவது நோய்வாய்ப்ப ட்டால் அவர்களை டோலிக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும் மலையில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. படிப்புக்காக மாணவ மாணவிகள் தினமும் சென்றுவர 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை மலை கிராமத்திற்கு நடந்து சென்றார்.
சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவி த்தனர். கலெக்டருடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர் பிரேமலதா, திட்ட இயக்குனர் செல்வகுரு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
மலைக்கு சென்று வர என 16 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்