என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- சிமெண்ட் பூச்சிகள் விழுவதால் பொதுமக்கள் அச்சம்
- பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக புகார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக ரேசன் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த 700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரேசன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது.
அடிக்கடி சுவர் மற்றும் சீலிங்கில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கீழே விழுகிறது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது, அவர்கள் மீது சிமெண்ட் பூச்சிகள் விழுந்து காயம் அடைகின்றனர்.
மேலும் அந்த ரேசன் கடை வளாகம் தற்போது மாட்டுத் தொழுவமாகவும் மாறி உள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக பழு தடைந்துள்ள கட்டிடத்தில் சென்று பொருட்கள் வாங்க அச்சமாக உள்ளது. ரேசன் கடை அமைந்துள்ள பகுதியில் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
ரேசன் கடையை சுற்றியுள்ள புதர்களிலிருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
ரேஷன் கடை வளாகத்தை சுத்தம் செய்வதோடு, பழுதடைந்த கட்டிடத்தையும் புதுக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே அசம்பா விதங்கள் ஏதும் நடக்கும் முன்பு பழுதடைந்த கட்டிடத்தை சீரமைப்ப தோடு, ரேசன் கடையை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினர்.
மாணவி கிடைக்காததால் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- வேலை சம்பந்தமாக சென்றபோது பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வேலை சம்பந்தமாக நேற்று இரவு ரஞ்சித் குமார் தனது பைக்கில் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
- அலட்சியமாக செயல்பட்டதால் நடவடிக்கை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பாக்கிய நபர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.
இதனை இன்ஸ்பெக்டர் சாந்தி முறையாக விசாரிக்காமல் ஊர் பஞ்சாயத்தாரர்களிடம் பேசி விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. இதனிடையே இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் மாணிக்கம் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். புகார் குறித்து முறையாக விசாரணை செய்யாத இன்ஸ்பெக்டர் சாந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக மலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சாந்தி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார் குறித்து விவரங்களை தனிப்பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் அளிக்க தவறியதாக தெரிகிறது.
மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க அவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார்களும் எழுந்தது.
அதன்படி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த திங்களன், ஏலகிரி மலை போலீஸ் நிலையத்திற்க்கும், அம்பலூர் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த ரமேஷ் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரோந்து பணியின்போது சிக்கினார்
- வாலிபரிடம் போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில், ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெனிகாயிட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றனர்
- மலர்கள் தூவி மாலை அணிவித்தனர்
ஆலங்காயம்:
தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி வரை 5 வது வலைப்பந்து (டெனிகாயிட்) உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்காக 18 பேர் உட்பட 9 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பா டியை சேர்ந்த பயிற்சியாளர் முரளி தலைமையில் கல்லூரி மாணவர்கள் சுகிவர்மன், அபினேஷ் மற்றும் அஞ்சலக ஊழியர் அறிவழகன் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.
இறுதிப் போட்டியில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கல்லூரி மாணவர் சுகிவர்மன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், ஜூனியர் அணி பிரிவில் ஒரு தங்க பதக்கம் என 2 தங்க பதக்கங்களை வென்றார்.
அபினேஷ் மற்றும் அறிவழகன் ஆகியோர் சீனியர் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய பயிற்சியாளர் முரளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சொந்த ஊரான வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாயிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசி யேஷன் நிர்வாகிகள், கிராம மக்கள், பெற்றோர்கள் மலர்கள் தூவியும் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- குடும்ப பிரச்சினையில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33), கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி மஞ்சு (28). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.
அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
- பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குறவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகள் சந்தியா.
இந்த நிலையில் சந்தியாவை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வைத்து டாக்டராக்குவதற்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ் டெய்லி, அமுது டெய்லி, மோனிகா, மார்க்டெய்லி ஆகிய 4 பேர் ரமேஷ் மற்றும் கல்பனாவிடம் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் கூகுள் பே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாக வும் சுமார் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளனர்.
அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் சீட்டு வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர்.
மேலும் நிலுவையில் உள்ள சுமார் 15 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டனர்.
இதுகுறித்து கல்பனா நேற்று 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- அன்னதானமும் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு மஞ்சள் , குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு மலர் மாலைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் கோபுரத்தின் மீது விளக்கு ஏற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
- முன் விரோதத்தால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு ஊமையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன் மனைவி அம்பிகா (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நடந்த 5-ந் தேதி குமார் (50) மற்றும் நந்தகுமார் (24) ஆகியோர் இடம் சம்மந்தமாக அம்பிகாவிடன் தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும் அம்பிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அம்பிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் அந்த பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் (வயது 50) என்பவரை திடீரென சரமாரியாக தாக்கியது.
இதில் வரதராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்