search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புப்படம்

    கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் மூலம் எவ்வித நிபந்தனைகள் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை அனுகலாம்.

    இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களை பெற கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தேவையான விவரங்களை பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×