search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி
    X

    புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

    ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி

    • அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
    • தரமாக விரைந்து முடிக்க உத்தரவு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே உள்ள வேலூர் சாலையில் திருவண்ணாமலை பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து வேலூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, திருக்கோவிலூர், வேட்ட வலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்க ளுக்கு பஸ்கள் இயக்கப்ப டுகிறது.

    இந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே வரும்போதும், வெளியே செல்லும் போதும் பஸ் நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

    பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வேறு இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தினர். இதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைக்க திருவ ண்ணாமலை திண்டிவனம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பயணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்ததோடு, தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்கா ணிப்பு பொறியாளர் பழனிவேல், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×