search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

    • குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 மட்டுமே செயல்படுகிறது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் திருமால் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென விவசாயிகள் ஏர்கலப்பை போன்று செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிக அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் இங்கு 2 நெல் கொள்முதல் மையங்கள் தான் செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்.

    இதனால் கலசப்பாக்கம் பகுதியில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உதவி திட்ட அலுவலர் திருமால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தான் இந்த கூட்டமே நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் வேளாண் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குறைவு தீர்வு கூட்டத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், பிடிஓ முருகன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×