search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்வு கூட்டத்திற்கு ரப்பர் பாம்பு எடுத்து வந்த விவசாயி
    X

    குறைதீர்வு கூட்டத்திற்கு ரப்பர் பாம்பு எடுத்து வந்த விவசாயி

    • மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
    • பாம்பு கடிக்கு காப்பீடு திட்டத்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வலியுறுத்தல்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, தாலுகாவில் நரசிங்கபுரம், கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஎஷ், இவரது மகன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது. இவரை விஷ பாம்பு கடித்தது.

    உடனே ரமேஷ் அவரது மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர் இல்லாததால். சேத்துப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை காண்பித்துள்ளார்.

    அப்போது மருத்துவமனை தரப்பினர் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டையில் பாம்பு கடிக்கு, மருந்து மற்றும் சிகிச்சை, அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ் சேத்துப்பட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடி, மற்றும் சிகிச்சைக்கு, மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். விவசாய நிலத்தில் விஷ ஜந்துக்கள் அதிகமாக உள்ளது.

    விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் எங்களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடிக்கு, சிகிச்சைக்கு, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2 ரப்பர் பாம்புகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×