search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
    • இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

    தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலப்பு தீவனம் தயாரித்தல், நல்ல ஆடுகளை தேர்வு செய்தல் குறித்து விளக்கி கூறப்பட்டது.
    • வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய கண்காட்சி திறந்து வைக்கபட்டது.

    திரூவாரூர்:

    நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண் மேல் ஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மைய வளாகத்தலைவர் டாக்டர். ஜெகதீசன் தலைமை தாங்கி நல்ல ஆட்டின் இனங்கள், அவற்றை தேர்வு செய்யும் முறை, இனப்பெருக்க முறைகள் குறித்து பேசினார்.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி முன்னிலை வகித்தார்.

    பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சபாபதி பேசுகையில், ஆடு வளர்ப்பதற்கான கொட்டகை முறைகள், பசுந்தீவன உற்பத்தி முறைகள், கலப்பு தீவனம் தயாரித்தல் மற்றும் நல்ல ஆடுகளை தேர்வு செய்தல் குறித்து விளக்கி கூறினார்.

    நீடாமங்கலம் கால்நடை உதவி டாக்டர் பவித்ரா ஆடுகளை தாக்கும் நோய்கள்மற்றும் அவற்றை தடுக்கும் முறை குறித்து விளக்கி கூறினார்.

    முன்னதாக வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய கண்காட்சியை டாக்டர் ஜெகதீசன் டாக்டர் ஜெகதீசன் திறந்து வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • முடிவில் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் காஞ்சி சித்திக், மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் அசாருதீன், மாவட்ட துணை செயலாளர் முகம்மது தவ்பீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில செயலாளர் அன்சாரி, மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது வாசிம், ஹாஜா மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.

    • டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
    • கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார்.

    வேளுக்குடி ஊராட்சி தலைவர் நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராசகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசிப்பழக வேண்டும். பிழையின்றி தமிழ் எழுத அடிப்படையாக பாட நூல்களை கடந்து நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும்.

    இலக்கிய படைப்புகளை தந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளிலேயே தனிச்சிறப்பு பெற்ற சொற்களை கொண்ட தஞ்சை வட்டார வழக்கு சொற்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

    நிறைய திருமுறை பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், நீதி இலக்கியங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் அறிவியல் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    • திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்.
    • மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கக்கூடியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவ மனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் 'கோவிட் சிறப்பு வார்டு' கட்டிடம் கட்டப்ப ட்டது.

    இந்த கட்டிடத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம். ஏழை எளியவர்கள் அதிகமா கவும், குடிசைகள் வீடுகள் நிறைந்த மாவட்ட மாகும். எனவே இந்த தொகுதியின் வளர்ச்சிதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இந்த மருத்து வமனையை பொருத்தவரை ஏழை எளிய மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்க கூடியது. எது தேவை என்று கேட்கும் பட்சத்தில் நிதி ஒதுக்கி தருவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கோபால், இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ரேணுகா, மருத்துவர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு பலகை வைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு கூட்டம் அனைத்து தன்னார்வ அமைப்புகளை கொண்டு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்ட வழங்க அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் நுகர்வோர் மைய செயற்குழு உறுப்பினர் துரை. ராயப்பன், முருகானந்தம், கலா, சரோஜினி அண்ணாதுரை, அரிமா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், அனுமதி இல்லாத இடத்தில் கேஸ் சிலிண்டர் விற்பதை தடை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு அறிவுப்பு பலகையும், குறைகள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும், விடுமுறை நாட்கள் மற்றும் பணி நேரம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் நாகராஜன் தலைமையில் வட்ட வழங்க அலுவலர் மதியழகனிடம் அளிக்க ப்பட்டது.

    மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
    • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

    விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

    பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடமும், மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கமும் கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    விழாவில் வலங்கைமான் அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராஜராஜசோழன், இனாம்கிளியூர் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அருண், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிருபாவை வெட்டினார்.
    • ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 35) இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவ ருக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆன நிலையில் கிருபா(30) என்ற மனைவியும் 4 மற்றும் 2வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்தநிலையில் ராணுவ வீரரான வீரமணி ராணுவ பணிக்கு சென்றுவிட்டு விடுமுறையில் ஊர் வந்து செல்வதுண்டு.

    இந்தநிலையில் கடந்த ஒரு மதத்திற்கு முன்பு விடுமுறை வந்திருந்து வீட்டில் இருந்த ராணுவ வீரர் வீரமணிக்கும் அவரது மனைவி கிருபாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிரு பாவை சரமாரியாக வெட்டினார்.

    அப்போது இதனை தடுத்த கிருபாவிற்கு இருகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உறவினர்கள் கிருபாவை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருபா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.
    • கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமம் புதுத்தெருவில் வசித்து வந்த மறைந்த நடேசன் மனைவி சகுந்தலா அம்மையார் இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.

    அதன்படி சகுந்தலா அம்மையார் மறைந்ததும் அவரது மகன்கள் சிங்கார வேல், பழனிவேல் ஆகியோர் சகுந்தலா அம்மையார் கண்களை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலமாக தானம் செய்தனர்.

    அந்த கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதே பகுதியில் அஞ்சல கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி கண்களை தானமாக வழங்கிய செய்திக் கேட்டு தானும் தானமாக கண்களை வழங்க வேண்டும் என்று சகுந்தலா அம்மையார் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    அதன்படி அவரது ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும்போது, இதுபோன்று இறப்பவர்கள் கண்களை தானமாக வழங்கினால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே கண்பார்வை இல்லாதவர்களின் சதவீதம் மிகமிக வெகுவாக குறையும் என்றார்.

    அவருடைய கண்களை பெற்றுக்கொண்ட அரவிந்த மருத்துவமனை கும்பகோணம் பிரிவை சேர்ந்த ஆதிகேசவன், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் நான்கு நபர் வரை இவரால் பார்வை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அந்தப் பகுதி மக்கள் இனி யாராவது எங்கள் பகுதியில் மறைந்தால், உடனடியாக கண் தானம் செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.

    ×