search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை மழை பெய்தது.
    • குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் திருவாரூர் கோயமுத்தூர் நீலகிரி தஞ்சாவூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூரில் கடுமையான வெப்பம் நிலவி வந்து நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    மேலும் திருவாரூரில் நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வண்டாம்பாளை கொடிக்கால்பாளையம் காட்டூர் பவித்ரமாணிக்கம், சேந்தமங்கலம் விளமல், நன்னிலம் கங்களாஞ்சேரி ஆண்டிப்பந்தல் ஸ்ரீவாஞ்சியம், மாப்பி ள்ளைக்குப்பம் போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தி ற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருவதாக வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழை நெற்பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் குளிச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துளள்ளனர்.

    • திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.
    • பணியாளர்கள் கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று தூய்மை பணி நடந்தது.

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஆணைப்படி, கோவில் செயல் அலுவலர் ஜோதி மேற்பார்வையில், நடந்த திருப்பணியில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம், நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்தனர். 

    • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
    • சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி - கொக்கலாடி கிராமமக்கள் தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி கிராமத்தில் உள்ள சித்தேரியில் மண் அள்ளு வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரத்த வெள்ளத்தில் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் முகமது அசாருதீன் ( 32). இவருக்கு திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் சிராஜுதீனின் உறவினர் பெண் ஒருவரை முகமது அசாருதீன் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். திருமணமான நிலையில் வேறொரு பெண்ணை காதலிக்கிறாரே என்று கூறி அதனை சிராஜுதீன் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் எப்படியாவது சிராஜுதீனை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டிய அசாருதீன், நேற்று இரவு கடைவீதி பகுதியில் மறைந்திருந்துள்ளார். அப்போது கடை வீதியில் இருந்து வீட்டுக்கு வந்த சிராஜுதீனை வழிமுறைத்து கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் நிலைகுலைந்த ரத்த வெள்ளத்தில் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து சிராஜுதீனின் மகன் ரியாவுதீன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து கொரடாச்சேரி போலீசார் சிராஜுதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவரை காணவில்லை.
    • சி.சி.டி.வி காமிரா மூலம் நகை திருடியவர் சிக்கினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது40).

    இவர் பழைய பஸ் நிலையத்தில் நகை கடை வைத்துள்ளார்.

    இவரது நகை கடைக்கு கடந்த 5-ந்தேதி டிப்டாப் உடையில் வந்த ஒருவர் மோதிரம் வேண்டும் என்று மாடல் பார்த்துள்ளார்.

    அப்போது 2 கிராம் எடை கொண்ட ஒரு மோதிரத்தை தேர்வு செய்த அவர், வாசலில் எனது மனைவி நிற்கிறார்.

    அவரிடம் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு, மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

    பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் வரவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    முத்துப்பேட்டை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு டிப்டாப் ஆசாமியை தேடிவந்தனர்.

    இந்தநிைலயில் தலைமறைவாக இருந்த காரைக்கால் டி.ஆர். பட்டினம் புது காலனி பகுதியை சேர்ந்த குமரேசன் (50) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த 2கிராம் மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.
    • இடிந்துவிழும் நிலையில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ளது.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த தோலி கிராமத்தில் கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழுவினர் பயன்பாட்டுக்காக கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் மூலம் அப்பகுதி பெண்கள் பயன்அடைந்து வந்தனர்.

    இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

    இதன் காரணமாக கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    எந்தநேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று தோலி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை கட்டிடம் இடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்துவிழும் நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ராணுவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் எக்பர்ட். இவர் மீது திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவரிடம் விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வெளிமாநில மது பாட்டில்கள் வாங்கி வந்து அதில் தமிழ்நாடு அரசின் மதுபான ஸ்டிக்கரை போலியாக ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவாரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் முடிவில் ராணுவ நகரில் தங்கியிருந்த எக்பர்ட் மற்றும் தினேஷ் ஆகியோரிடமிருந்து 618 போலீ ஸ்டிக்கர் ஓட்டிய மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ், கலையரசன், சுதா, கலையரசி, தருணாச்சா உள்பட 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    • சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா நடந்தது.
    • மாணவர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த தேசிங்குராஜ புரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் நாகை அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி கலந்து கொண்டு மாணவர்கள் அறிவியலை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.விழாவில் சமூக ஆர்வலர் துரைமுருகன் மற்றும் கல்வி ஆர்வலர் ரவி, முருகவேல் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

    முடிவில் தன்னார்வலர் ரேவதி நன்றி கூறினார்.

    விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனை வருக்கும் இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    • பாரத் மாலா திட்ட டெண்டர் முறைகேட்டை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி உள்ளது.
    • ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூரில் நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியா என்ற கூட்டணி உருவாவதற்கு தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணி காரணமாக இருக்கிறதே என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துள்ளது. அதனால்தான் எங்கே போனாலும் அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பல மாநிலங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எங்கே போனாலும் நாம் அமைத்துள்ள இந்தியா கூட்டணி பற்றி விமர்சனம் செய்து பேசி கொண்டிருக்கிறார். கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

    அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய நம்முடைய தி.மு.க. பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. மோடி என்ன பேசுகிறார் தமிழ்நாட்டில் ஊழல் வந்து விட்டதாம். 9 வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கக் கூடிய ஊழலை ஒழித்தே தீருவேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    நான் பிரதமர் மோடியை பார்த்து அடக்கத்துடன் கேட்க விரும்புவது ஊழல் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கக் கூடிய மோடிக்கு உண்டா?

    உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது வெளியே வந்து விட்டதே. ஊழலை பற்றி பி.ஜே.பி. பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.

    சி.ஏ.ஜி. அறிக்கை இன்று என்ன சொல்கிறது? மத்திய அரசுக்கு கட்டுப்பட்டுள்ள அந்த அமைப்பு இது. ஒவ்வொரு வருடமும், அந்தஅரசின் நிலையைப் பற்றி அரசு செய்துள்ள செலவு பற்றி அதையெல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சி.ஏ.ஜி.யின் வேலை.

    ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்து போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. இப்போது சி.ஏ.ஜி. சொல்கிறது.

    இதில் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    1. பாரத் மாலா திட்டம்

    2. துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம்.

    3. சுங்கச்சாவடி கட்டணங்கள்.

    4. ஆயுஷ்மான் பாரத் திட்டம்.

    5. அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்.

    6. கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம்.

    7. எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம்.

    இந்த 7 திட்டங்களிலும், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று மிகத் தெளிவாக எடுத்து சொல்லி உள்ளது. நிதியை கையாள்வதில் மோசடிகள் அரங்கேறி உள்ளது என்று அந்த அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

    அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு போலி செல்போன் நம்பர். அந்த நம்பர் 9999999999. இந்த போலி நம்பரில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு அதில் ஊழல் நடந்துள்ளது.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 88,760 பேர் இறந்து விட்டனர். ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி 214923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டு தொகை வழங்கி இருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கி உள்ளனர்.

    தகுதியில்லாத குடும்பங்கள், இந்த திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.22 கோடியே 44 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. இதை இந்தியா கூட்டணி சொல்லவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வறிக்கை வெளியிடக் கூடிய சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.

    அடுத்து துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம். 1 கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த செலவு ரூ.250 கோடியாக அதிகரித்து அதாவது திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துவதற்காக ஒரு திட்டம் போட்டார்கள். இதில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பாரத் மாலா திட்ட டெண்டர் முறைகேட்டை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் சுமார் 600 சுங்க சாவடிகள் இருக்கிறது. இதில் 5 சுங்கச் சாவடிகளில் மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்தது. அதில் விதிகளுக்கு புறம்பாக 132 கோடியே 5 லட்சம் ரூபாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்துள்ளனர்.

    இதில் தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியும் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச் சாவடியில் மட்டும் ரூ.6½ கோடி முறைகேடாக வசூல் செய்துள்ளனர்.

    அப்படியென்றால் நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரிய வரும். இதை அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

    இந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனத்தின் விமான எந்திர வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

    ஊரக வளர்ச்சி அமைச்சகத்தோடு ஓய்வூதிய திட்ட பணத்தை எடுத்து ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    இப்படி என்னென்ன முறைகேடுகள் எவ்வளவு கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதே சி.ஏ.ஜி. அறிக்கைப்படி ஒன்றிய அரசு துறைகளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை பற்றி உள்துறை மந்திரி அமித்ஷா அதிகம் கவலைப்படுகிறார். அதே போல் சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் என்ன சொல்கிறது என்றால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

    அதில் என்ன உள்ளது என்றால், ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மீதுதான் போன வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது என்று சொல்லி உள்ளனர். இதில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46,643 புகார்கள் பதிவாகி உள்ளது.

    இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று இன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து நம் மீது வீண் பழி சுமத்தி, இதுபற்றி எல்லாம் தி.மு.க. பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு கோபத்தில் எரிச்சலில் நம்ம பழி வாங்குவதற்காக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மூலம் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள.

    இதையெல்லாம் கண்டு அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி விடுகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க. பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சிவிட மாட்டோம். எமர்ஜென்சியை யே பார்த்தோம். எதிர்த்தோம். எதைப் பற்றியும் தி.மு.க. கவலைப்படவில்லை.

    இந்தியா என்ற கூட்டணியும் இதைப் பற்றி சிந்திக்க தயாராக இல்லை. லஞ்ச ஊழலை மூடி மறைக்க மதவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் இனி நீங்கள் ஏமாற்ற முடியாது. அதற்காகத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.

    இப்போது தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

    வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு கோடிக்கு குறையாமல், அதை விட அதிகமாகத்தான் வரும் என்று கணக்கு சொல்கிறது. இருந்தாலும், எவ்வளவு வந்தாலும் கவலையில்லை. யார்-யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சேரப்போகிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
    • 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

    தாம்பரம்:

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர்.

    இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

    அவர்கள் பெயர் ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), தீபக் கஸ்யாப் (21), அன்குல் (36), சத்ரு தமன் சிங் (65), பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மித்திலேஸ் (62), சாந்திதேவி வர்மா (70), குமார் ஹிமானி பன் சால் (27), மனோரமா அகல்வால் (81), இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு 9 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து உடல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று மதியம் 12 மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் 5 உடல்களும், மதியம் 2 மணிக்கு 4 உடல்கள் பெங்களூர் வழியாக செல்லும் மற்றொரு விமானத்தில் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

    • இந்தியா கூட்டணி உருவானதை பிரதமரால் தாங்க முடியவில்லை.
    • கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

    திருவாரூர்:

    திருவாரூரில், நாகை எம்.பி. செல்வராஜின் இல்ல திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவை காப்பாற்றவே, இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. மும்பையில் அடுத்து நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும், கொடிய ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தியா கூட்டணி உருவானதை பிரதமரால் தாங்க முடியவில்லை. எங்கு சென்றாலும், திமுக குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். திமுக குறித்து பேசாமல் பிரதமரால் இருக்க முடியவில்லை.

    சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது. ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×