search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மகாகாளி அம்மன், வீரமாகாளி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவிளக்கு போடுதல், சிறப்பு அர்ச்சனை ஆகியவை நடந்தது.

    பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கீழாளவந்தசேரி கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடந்தது.
    • கால்நடை டாக்டர் பவித்ரா, கால்நடை ஆய்வாளர் ஜி.மாலதி மற்றும் பலர் முகாமை நடத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரம் கீழாளவந்தசேரி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் கால்நடை துறை இணைந்து பெரியம்மை தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ரூபாபாரதி மோகன் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர் பவித்ரா, கால்நடை ஆய்வாளர் ஜி.மாலதி மற்றும் கால்நடை உதவியாளர் என்.மோகன்,

    உதவி தோட்டக்கலை அலுவலர் வி.சங்கரி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தா.அருட்செல்வி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • கிளியனூர் பெருமாள் கோவில்கள், பழையனூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில்களிலும் வழிபாடு நடைபெற்றது.

    திருவாரூர் :

    கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சாத்தனூர் மற்றும் கிளியனூர் பெருமாள் கோவில்கள், பழையனூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
    • லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம் அடைந்தான்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி நீலாதாட்சி.

    இவர்களுடைய மகன் அன்புச்செல்வன் (வயது14).

    வண்டாம்பாளை அருகே உள்ள தனியார் பள்ளியில் அன்புச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அன்புச்செல்வன தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சைக்கிளில் சென்று கூடைப்பந்து பயிற்சி பெறுவது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம் போல் திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று விட்டு சைக்கிளில் அன்புச்செல்வன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

    திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வண்டாம்பாளை ஆர்ச் அருகே சென்றபோது பின்னால் திருவாரூரில் இருந்து வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவன் அன்புச்செல்வன், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

    உடனே அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அன்புச்செல்வனை பரிசோதித்த டாக்டர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த சுந்தரை (40) கைது செய்தனர்.

    மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த மாணவன், லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெண்கள் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம்.
    • மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பாக பெண்களை வளப்படுத்த தேசத்தை மேம்படுத்துங்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் வரவேற்றார்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் த.விஜயசுந்தரம் பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    அப்பொழுது அவர் பேசுகையில் பெண்களின் வளம் தேசத்தை மேம்படுத்த செய்யும் என்றும், ஆணுக்கு இணையாக பெண்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார்.

    விழாவில் இன்னர்வீல் சங்கம் அதிகாரி மாலதி செல்வம் தலைமை வகித்தார்.

    நேதாஜி கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கட்ராஜலு, சுந்தர்ராஜ் செயலர், நிர்மலா ஆனந்த் செயல் அதிகாரி வாழ்த்துக்களை கூறினர்.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முனைவர் சுதா பொருளாதாரத் துறை பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பல துறையில் வளர்ந்து வருகிறார்கள்.

    இன்னும் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

    பாலின பாகுபாடு இன்றி பெண்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும் சமூகத்திலும் சிறந்து விளங்க மற்றும் வீரம் நிறைந்த பல சாதனை மிகுந்த பெண்களின் பெயர்களை எடுத்துக்காட்டாக கொண்டு பேசினார்.

    மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கப்பட்டது.

    முடிவில் பவானி பாண்டியன் நன்றி கூறினார்.

    சங்க உறுப்பினர்கள் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.

    உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • மாலை 6 மணிக்கு கண்காட்சியை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைக்கிறார்.
    • புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து "மன்னார்குடி 3-வது புத்தக திருவிழா- 2023" நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 10 நாட்கள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

    மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 15 சதவீதமும், பொதுமக்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி விலையில் நூல்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு ரூ.70 லட்சம் விலையுள்ள நூல்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள புத்தக திருவிழா பேரணியை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைக்கிறார்.

    மாலை 6 மணிக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் கலந்து கொண்டு உரை ஆற்றுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட நூலக அலுவலர் முருகன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலை பள்ளி, சவளக்காரன் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நூல்கள் வாங்கலாம் என விழாக்குழு சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

    • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
    • 25 யூனிட் ரத்தம் பெறப்பட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, தெற்கு வீதியில் உள்ள மணி ஆஸ்பத்திரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னிலையில் மணி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உதவியுடன் சங்க தலைவர் மாணிக்கவாசகம் தேசிய கொடி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அனைவருக்கும் டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று மாணவர்களுக்கு மணி ஆஸ்பத்திரி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, டெல்டா ரோட்டரி சங்க மருத்துவ சேர்மன் டாக்டர் பாபுவின் மணி ஆஸ்பத்திரியில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி உதவி யுடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 25 யூனிட் ரத்தம் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

    • உப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது.
    • வயல்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சுற்றி உள்ள கிராமங்களில் காணப்படும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது கோரையாறு ஆகும்.

    இந்த ஆற்றை நம்பி தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், ஆலங்காடு, உப்பூர், ஜாம்பவானோைட, எடையூர், தோலி போன்ற பல கிராமங்கள் உள்ளன.

    இந்த நிலையில் உப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது.

    ஆற்றில் உள்ள தண்ணீர் தெரியாத படி ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் ஆற்றில் இருந்து வயல்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

    மழை காலங்களில் வயல்களில் உள்ள மழைநீர் வடிய வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

    மேலும் ஆகாய தாமரை செடிகளால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.

    ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கோரையாற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரையாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் கலெக்டர் மரியாதை செய்தார்.
    • 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாவட்ட கலெக்டர் மரியாதை செய்தார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ12,552 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ1,22,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ1,08,296 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ1,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 நபருக்கு ரூ5,47,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 36 பேருக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 ரூபாய் மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்கு மார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சி தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    ×