search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பள்ளி மாணவன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான்.
    • சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொறியியல் பிரிவு சார்பில் உலக இளைஞர் திறன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழில் கல்வி பயிற்றுனர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் முகமது ரபிக் கலந்து கொண்டு பேசுகையில்:-

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி உலக இளைஞர் திறன் தினத்தை அறிவித்தது. இந்த நாள் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனை வருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" என்று பரிந்துரைக்கிறது.

    ஐ.நா.வை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்கள் மற்றும் பெரியவர்க ளிடையே வளர்க்க உதவுவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

    பின், பள்ளி மாணவன் தவச்செல்வன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான். மாணவன் லோகேஸ்வரன் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்து பேசினார். முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் ஆசிரியை அஜிதா கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 பேரும் ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.
    • பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    நன்னிலம் அருகே உள்ள தென்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அலமேலு மங்கை (வயது54), தனலட்சுமி(65), சிவா(32). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த போது, பனை மரத்தில் கூடுக்கட்டி இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    • குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.
    • இவ்விருதிற்கு விண்ணப்பிக்க வருகிற 20.7.2023-ந்தேதி கடைசிநாளாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

    அதன்படி 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது வருகிற 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. 15 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம்.

    ஏப்ரல் 1, 2022 (1.4.2022) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, (31.3.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் (2022-2023) அதாவது 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    தற்போது இவ்விருதிற்கு விண்ணப்பிக்க வருகிற 20.7.2023-ந்தேதி கடைசிநாளாகும். மேலும் விவரங்கள் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620 அல்லது மாவட்ட விளையாட்டு-இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் 7401703448-க்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த14 ந்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
    • குடும்பத்துடன் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 56). இவர் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.

    இந்நிலையில் கடந்த14 ந்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் நேற்று இரவு குடும்பத்துடன் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 80 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ராமமூர்த்தி மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.35 லட்சமாகும்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.

    • வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.
    • மகாலிங்கம் ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி அருகே சேகல் மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது63). நேற்று காலை இவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனை அறியாத மகாலிங்கம் கடப்பாரையால் குழி தோண்டியபோது எதிர்பாராதவிதமாக மின்வயர் மீது பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் இறந்தார். தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி திருவாரூரில் நடக்கிறது.
    • திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

    முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

    திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொலைபேசி எண்ணை 04366-224226 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
    • வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராஜகோபாலசாமி கோவில் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் செங்கமலத்தாயாருக்கு ஆடிப்பூர திருவிழா கொண்டாப்படும்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர உற்சவ திருவிழா நேற்று செங்கமலத்தாயார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சேனை முதல்வர் நகர் சோதனை முடித்து சிம்மக்கொடி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீட்சிதர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்து திருவாராதனம் எனும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர். செங்கமலத்தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடிப்பூர திருவிழாவையொட்டி 10 நாட்கள் செங்கமலத்தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகி்ன்றனர்.

    • அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர்.
    • முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜ்ஜியா தெருவை சேர்ந்தவர் அனஸ் மைதீன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். கூத்தாநல்லூர் குனுக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(45). இவர், கூத்தாநல்லூர் நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பிரவிணாவின் கணவர் ஆவார்.

    அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆனாலும் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து இணையவழி குரூப்பில் அனஸ் மைதீன் குறித்து பதிவிட்டு வந்ததாகவும், பதிலுக்கு அனஸ் மைதீனும் பதிவிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு முத்துகிருஷ்ணன் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அனஸ் மைதீனை, முத்துகிருஷ்ணன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதனை பார்த்த மற்ற தி.மு.க. பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்திய சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. வேலவன் தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர் விஜய், தலைவர் சந்திரசேகர், பொருளாளர் அருண், நிர்வாகிகள் ஜெயராஜ், ஜோதிபாசு, தினேஷ், சிவகுரு, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்்.

    அதில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • எவ்வாறு இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தாலுக்கா விற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ண ப்பிக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் தாசில்தார் மகேஷ் குமார் தலைமையில் முத்துப்பே ட்டையில் நடைபெற்றது.

    வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, தனி தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், தினேஷ் ஆகியோர் பயிற்சி அளித்து பேசினர்.

    விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபடுவோர் எவ்வாறு இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் விண்ணப்பிக்க, ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் செயலி பதிவிறக்கம் செய்து செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயலி ஆப்பில் குடும்ப அட்டை எண், ஆதார்எண், தொலைபேசி, புகைப்படம் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் அனைத்தையும் கையாளுவது குறித்து விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முத்துப்பே ட்டை வருவாய் அலுவலர் வினோத் குமார், பாலையூர் வருவாய் அலுவலர் சுதா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2 வகுப்பறை கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் சங்கேந்தி ஊராட்சியில் ரூ.7.49 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் சமையலறை கூடம் கட்டப்பட்டு வருவதையும், உதயமா ர்த்தாண்டபுரம் ஊராட்சி யில் ரூ.33.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், உப்பூர் ஊராட்சியில் ரூ.7.49 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் சமையலறை கூட கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், தலா ரூ.2.4 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், முத்துப்பேட்டையில் ரூ.395.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.15.15 லட்சம் மதிப்பீட்டில் கற்பகநாதர்குளம் பகுதியில் அங்கான்வாடி மையம் கட்டப்பட்டு வருவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை விரைந்து முடிந்து பயன்பா ட்டிற்கு கொண்டுவர அலு வலர்களுக்கு அறிவுறு த்தினார். ஆய்வி ன்போது முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்கு மார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×