search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய காட்சி.

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தலைமை தாங்கினார்.
    • இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு என 3 வகையான பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்து விரிவாக பேசி ஆலோசனை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. தேர்தல் பணிகுழு பூத் கமிட்டி அமைக்கும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் -அமைச்ச ருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    தூத்துக்குடி தொகுதி

    அதன்படி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மணிநகர் தனியார் மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முக நாதன் தலைமை தாங்கினார்.

    பகுதி செயலாளர்கள், முன்னாள் துணை மேயர் சேவியர், மேற்கு பகுதி முருகன், மத்திய பகுதி ஜெய்கணேஷ், நட்டார்முத்து, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச்செல்வன், சுடலைமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூத் கமிட்டி

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 284 வாக்குச்சாவடி க்கும் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு என 3 வகையான பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்து விரிவாக பேசி ஆலோசனை வழங்கினார்.

    இதில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹென்றி, தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாநில மருத்துவர் அணி இணைச் செய லாளர் டாக்டர் ராஜ சேகர், துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் யு.எஸ். சேகர், நடராஜன், விக்னேஷ், தனராஜ், பிரபாகர், அருண் ஜெபக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூமணி, பிள்ளை விநாயகம், திருச்சிற்றம்பலம், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வலசை வெயிலுமுத்து, மனுவேல் ராஜ், டைகர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×