என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்கலாம்
- சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது.
- சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இயங்கி வந்த வைஸ்ணவி பில்ட்ர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி, தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கவர்ச்சி கரமான திட்டங்களை வெளியிட்டது. அதன்படி முதலீட்டு தொகைக்கு 100 நாட்கள் முடிந்த பின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும், இல்லையென்றால் வீட்டுமனையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதை உண்மை என நம்பிய சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39) பார்த்தசாரதியின் நிறுவனத்தில் ரூ.8.80 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு தொகையை பெற கடந்த 2018-ல் நிறுவனத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டி கிடந்தது. மேலும் பலரிடம் இந்நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதுகுறித்து விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது. பாஸ்கரன் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் அமுத சுரபி, வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள், அசல் ஆவணங்களுடன் சேலம் அழகாபுரம் பஞ்சவர்ணம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்