search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா.

    முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • துண்டு, துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் மீண்டும் துளிர் விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதீகம்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு துண்டு, துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் மீண்டும் துளிர் விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம். முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த வருடம் கடந்த 3ம்தேதி கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.10 ம் நாளான வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை நிவர்த்தி செய்தனர். அப்பொழுது அங்கு எழுந்தருளிய முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த தீமிதி திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி (பொ) பழனிச்சாமி தலைமையில் கொள்ளிடம், புதுப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட காவல் நிலையங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் அறங்காவலர் நடராஜன் செய்திருந்தார்.

    Next Story
    ×