search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு முட்டி 10 பேர் காயம்
    X

    மாடு முட்டி 10 பேர் காயம்

    • காளை விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.கொட்டாய் கிராமத்தில் முத்து மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆம்பூர், அணைக்கட்டு, வேலூர் காட்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

    காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்று அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டி தள்ளியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளித்தனர். பின்னர் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பு நிலவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எருது விடும் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×