search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகள் முட்டி 14 பேர் படுகாயம்
    X

    நாட்டறம்பள்ளி அருகே கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

    காளைகள் முட்டி 14 பேர் படுகாயம்

    • திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பத்தில் எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 45,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 31000 ரூபாய் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த எருது விடும் விழாவில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினர் முன்னதாக உறுதி மொழி ஏற்றனர்.

    அதன் பிறகு வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை கால் நடை மருத்துவர்கள் பரிசோதனை பிறகு எருது விடும் விழாவில் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.

    இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 5000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாடு முட்டியதில் சுமார் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில் 2 பேர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×