search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்
    X

    கடைக்கு சீல் வைத்த காட்சி.

    வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்

    • நகராட்சி கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன
    • வாடகை கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட், ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 608 கடைகள் உள்ளது. இந்த கடைகளை ஏலம் முறையில் ஏலம் எடுத்தவர்கள் மாத வாடகை செலுத்த வேண்டும்.

    நகராட்சி கடைகளில் பல்வேறு கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு பலமுறை நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் சென்று வாடகை கேட்டும் வாடகை தரவில்லை.

    இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-

    நகராட்சி கடைகள் வாடகை மூலம் நகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் கொண்டு திருப்பத்தூர் நகராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து வருகிறோம்.

    நகராட்சிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தொகையை கட்ட வேண்டும் கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ஏலம் விடப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×