search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    • மீறி திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை
    • போலீசார் 2 வீட்டாரையும் அழைத்து அறிவுரை கூறினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தியதில் 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 வீட்டாரையும் அழைத்து அறிவுறித்தி திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    தகவலை அறிந்த குழந்தைகள் நலக் குழு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் திம்மாம்பேட்டை போலீ சாருடன் மல்லகுண்டா பகுதிக்குச் சென்று சிறுமியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

    மீறி திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

    Next Story
    ×