search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்த முயன்ற 2½ டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    ரெயிலில் கடத்த முயன்ற 2½ டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை
    • ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் கடந்த ஒரு வாரமாக சங்கமித்ரா, லால் பாக், சேஷாத்ரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பாதுகாப்பு படை போலீஸ்சார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் ரெயில்களில் மர்ம நபர்கள் சிக்னலுக்காக மெதுவாக செல்லும் ரெயில்களில் முட்புதரின் மறைவில் சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைத்து ரெயில்கள் மூலம் கடத்துவதை கண்காணித்த பாதுகாப்பு படை போலீசார் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசியும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி என மொத்தம் 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் எடுத்து வந்து நேற்று வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×