search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்காயத்தில் ரூ.76 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    ஆலங்காயத்தில் ரூ.76 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள்

    • எம்.எல். ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன் தொடங்கி வைத்தனர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியில் ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் தலைமை யில் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி கலந்து கொண்டு கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் கிரிசமுத்திரம் ஊராட்சியில் முதல் அமைச்சர் கிராம புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் கிரிச முத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, சம்பந்திகுப்பம், புருஷோத்த குப்பம் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் சித்ரா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிர பாகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×