search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

    • புல் அறுத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ் (35). இவர் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று பின்னர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை தனது விவசாய நிலத்தில் இருந்த 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றை சுற்றி புதர் போல் முளைத்திருந்த புல்லை அப்புறப்படுத்தி அதனை கட்டாக கட்டி தூக்கிப் போட முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி கோவிந்தராைஜ பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கிணற்றில் தவறி விழுந்து பலியான கோவிந்தராஜ்-க்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும் 5 வயதில் ஆண் பிள்ளையும், 2 வயதில் பெண் பிள்ளையும் உள்ளனர். மேலும் தற்போது தீபா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×