என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் பலி
- 5 பேர் படுகாயம்
- திருமணத்திற்கு பட்டு சேலை வாங்குவதற்காக சென்ற போது விபத்து
ஜோலார்பேட்டை:
கர்நாடக மாநிலம் பெங்க ளூரு விநாயகா படவானா வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசாமி. இவரது மனைவி விஜயலட் சுமி (வயது 44). திருமணத் துக்கு பட்டுப்சேலை வாங் குவதற்காக இவர்கள் பெங்க ளூருவிலிருந்து புறப்பட்டு காஞ்சீபுரத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களு டன் பெங்களூரு தாவண கெரே பகுதியை சேர்ந்த சீனி வாசன், இவரது மனைவி பார்வதி (50), வெங்கடரெட்டி மனைவி சுப்பம்மா (60), பிர பாகரன் மனைவி சரஸ்வதி (45) மற்றும் வித்யா நகர் பகு தியைச் சேர்ந்த சீனிவாசா ரெட்டி, இவரது மனைவி கீர்த்தனா (42) ஆகியோரும் வந்தனர்.
காரை பெங்களூரு விதா யகா நகர் பகுதியைச் சேர்ந்த பீமாசாரி (35) ஒட்டி வந்தார்.
இவர்களது கார் திருப்பத் தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளியை அடுத்த பங்களா மேடு பகுதியில் வந்து கொண் டிருந்தபோது திடீரெனடிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடி தடுப்புசுவர் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் கீர்த்தனா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 4 பெண்கள் மற்றும் டிரைவர் உட்பட 6 பேர் படு காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த நாட்டறம் பள்ளி தாசில்தார் குமார் மற் றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத் துக்கு விரைந்து வந்து படுகா யம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணி யம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பார்வதி மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரை கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பலி யான கீர்த்தனா உடலை பிரேத பரிசோதனைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத் தனர்.
இந்த விபத்து குறித்து நாட் டறம்பள்ளி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.