search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மரங்களை வெட்டியதால் துணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    மரங்களை வெட்டியதால் துணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • அதிகாரியுடன் சமூக ஆர்வலர்கள் வாக்குவாதம்
    • நடவடிக்கை எடுக்க தாசில்தார் அலுவலகத்தில் புகார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கச்சேரி சாலையில் அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள துணை பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்த 2 மரங்களை கூடுதலாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    அங்கு வந்த டாக்டர் ஏபிஜே பசுமைப் புரட்சி அறக்கட்டளையினர், வேர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்துவதாக கூறி அதை சுற்றியுள்ள பசுமை யான வேம்பு மற்றும் சிறுவகை மரங்களை யாருடைய அனுமதியும் இல்லாமல் அடியோடு வெட்டி வருவது கண்டிக்க த்தக்கது என்று துணை பதிவாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    பின்னர் துணை பதிவாளர் மீதும் மரம் வெட்ட உதவியாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    Next Story
    ×