என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவர்களை போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த இம்ரான் மகன் முகமது பைசான் (வயது 22) மற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த சையத் ரகுமான் மகன் நிஜாஸ் சாஹிப் (வயது 19) ஆகிய இருவரும் கடந்த 26ந்தேதி வெலக்கல்நத்தம் அருகே பைக்கில் சென்ற பவித்ரா என்பவரிடம் செல்போன் மற்றும் தங்க நகை பறிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலிசார் முகம்மது பைசான் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.