search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வீணாக சென்ற அவலம்
    X

    குழாயில் இருந்து குடிநீர் அருவிபோல கொட்டிய காட்சி.

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வீணாக சென்ற அவலம்

    • கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    சேலம் மேட்டூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் வழியாக அரக்கோணம் வரை விநியோகம் செய்யபட்டு வருகிறது.

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு நீர் வந்து செல்ல 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது.

    தண்ணீர் செல்லும் பாதையில் அழுத்தம் அதிகரிக்கும் போது குழாய் வெடிக்காமல் இருக்க உபரி நீர் வெளியேறி ஏரியில் கலப்பதற்காக இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அருகே ராட்சத குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடிக்கடி அந்த ராட்சத குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாக செல்கிறது.

    நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. மக்களுக்கு குடிநீராதாரமாக சென்றடைய வேண்டிய குடிநீர் வீணாக செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.

    குடிநீர் வடிகால் வாரியம் இதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டிய குடிநீரை வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×