search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவில் அருகே கழிவறை, குளியலறை அமைக்க எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ஜோலார்பேட்டை அருகே மயில் பாறை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் குளியலறை வசதி ஏற்படுத்த தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    முருகன் கோவில் அருகே கழிவறை, குளியலறை அமைக்க எம்.எல்.ஏ. ஆய்வு

    • பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
    • சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்ய உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட மயில் பாறை முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆடி மாதத்தில் பக்தர்கள் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கு பக்தர்களுக்கு போதுமான குளியலறை மற்றும் கழிவறை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மயில் பாறை முருகன் கோவில் பகுதியில் பெண்கள் உள்ளிட்ட பெரியவர் முதல் சிறியவர் வரை குளிப்பதற்கு குளியலறையும் கழிவறை கட்டிடமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனால் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி நேற்று மயில் பாறை முருகன் கோவில் பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் நிர்வாகம் குறித்தும் பக்தர்களின் வருகைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

    இதனை அடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் குளியலறை மற்றும் கழிவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து நேரில் பார்வையிட்டார்.

    மேலும் இங்குள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

    குழந்தைகளுக்கு முறையாக சத்துணவுகளை வழங்க வேண்டும் எனவும் அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பொறுப்புக் குழு உறுப்பினர் சசிகுமார், ஏலகிரி கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×