search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்தவர் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு
    X

    பிணம் புதைக்க குழி தோண்ட அனுமதி மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி.

    இறந்தவர் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு

    • அதிகாரிகள் விசாரணை
    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே உள்ள பிஎம்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமுத்தன் ( வயது 60). பீடி சுற்றும் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுமுத்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திடீரென உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குழி தோண்ட சென்றனர்.

    அப்போது சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் மத்தான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×