search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்ஓ எச் ஷெட் வளாகத்தில் அகில இந்திய எஸ்சி எஸ்டி ரெயில்வே சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜோலார்பேட்டை கிளை நிர்வாகி எஸ் சந்திரகாசி தலைமை தாங்கினார். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

    இதனைத் தவிர்த்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தொழிலாளரின் உரிமையை பறிக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    Next Story
    ×