search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலை சிறுவர்கள் பூங்காவில் பழுதான விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்
    X

    சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் பழுதான நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

    ஏலகிரி மலை சிறுவர்கள் பூங்காவில் பழுதான விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்

    • சீரமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலை களால் சூழப்பட்டுள்ளது. அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, நிலாவூர் ஏரி, ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இம்மலையில் அமைந்துள்ளன.

    இதனால் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் முக்கிய சுற்றுலா திடல்களில் ஒன்றான புங்கானூர் ஏரியான படகு இல்லம் ஆகும்.

    இந்த ஏரி 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ளது. இதன் பக்கத்தில் நிழற்குடம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கு ரூபாய் 5 நுழைவுக் கட்டணமும், பெரியவர்களுக்கு ரூபாய் 15 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

    குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படா தவாறு விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் எனக் குழந்தை களின் பெற்றோர்கள், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×