search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
    • சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    திருவள்ளூர்:

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில்,

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும்.

    உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

    சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • கனமழையால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனமழை எதிரொலியால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8 ஆயிரத்து 744 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 74 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து எதிர்பாத்த அளவு இல்லை. இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 930 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. 200 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் கொள்ளளவை எட்டி உள்ளது. 

    சென்னையை சுற்றி உள்ள 12 ஏரிகள் பாதி அளவு மட்டுமே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் மாமல்லபுரம், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி பகுதியில் உள்ள ஏரிகளிலும் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம், பருத்திப்பட்டு, அத்திப்பட்டு, திருத்தணி மற்றும் ராமாபுரம் பெரிய ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விடும். தற்போது தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் ஏரி, குளங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    • ராஜி தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜி (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் எர்ணாவூர் ராமகிருஷ்ணாநகர் அருகே தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
    • பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காக்களூர் ஊராட்சிக்கு திருவள்ளூர் ஹம்சா நகர் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்காக தனி பைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து காக்களூர் பொதுமக்கள் ஊராட்சி மற்றும் அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.

    இதனால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கூனிபாளையம் காலனி. இங்கு சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 4 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் நீர்வற்றி விட்டதால் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியினருக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சீதஞ்சேரி -பெண்ணாலூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மற்றும் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரகு ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இங்கிருந்து எம்.ஜி.ஆர் நகர், சில்வர் நகர், சேக்கன் காலனி, கிருஷ்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டுகட்டப்பட்ட குடிநீர் தொட்டி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ள கம்பிகள் வெளியே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

    மேலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து பச்சைபாசிப் படிந்து உள்ளது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி வாங்க இடிந்து விழும் நிலையில் காட்சி அளிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பம்பு ஆப்பரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சப்படுவதால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது.
    • அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே 1703 ஏக்கர் நில பரப்பில் அறிவுசார் நகரம் அமைப்பதை எதிர்த்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், எர்ணாகுப்பம், வெங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கி 1703 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக பூர்வாங்க பணிகளை தொடங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது. அறிவுசார் நகரம் அமைத்தால் மூன்று போகங்கள் விளையக்கூடிய விலை நிலங்கள், வீடுகள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், திட்டத்தை எதிர்த்தும் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தனசேகர், இளைஞர் அணி தலைவர் அன்பு, விவசாய சங்கத் தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுதாகர், வன்னியர் சங்க செயலாளர் டில்லிபாபு, ஆவாஜி பேட்டை பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவுசார் நகரம் அமைத்தால் பாதிப்பு அடைவோர் மற்றும் ஏராளமான பா.ம.க. வினர் திருவோடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் இந்த கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீருடன் கழிவுநீர் திறந்து விடப்படுவதை கண்டித்து அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மப்பேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். இதில் 3141 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 86 சதவீதம் நிரம்பி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.08 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 68 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 26 கனஅடிதண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×