என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்ள 30,123 பேர் பதிவு
- 11-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
- நாளை மறுநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள 30 ஆயிரத்து 123 பேர் ஆர்வமுடன் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதில் தடகளம், செஸ், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிண்டன், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
போட்டிகளில் பங்கேற்பதற்காக தனி நபர்கள் பிரிவில் 11 ஆயிரத்து 560 பேரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18 ஆயிரத்து 563 என மொத்தம் 30 ஆயிரத்து 123 பேர் பதிவு செய்து உள்ளனர். சிலம்பம்-இறகுபந்து இப்போட்டிகள் தொடக்க நாளில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்டது. பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி பிரிவினர்களுக்கு ஆண்களுக்கான தடகள போட்டிகளும், பெண்களுக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினர்களுக்கு சிலம்பம் மற்றும் இறகுப் பந்து போட்டிகளும், ஆக்கி போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆண்களுக்கு நீச்சல், கால்பந்து போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டது. மேலும் பொதுப் பிரிவினர்களுக்கும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாட்டினர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை மற்ற வீரர்கள் உற்சாகப்படுத்தினர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) (பெண்களுக்கான) கைப்பந்து, மேசைப்பந்து, கபடி, நீச்சல் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் பொதுப்பிரிவினர்களுக்கு கபடி போட்டிகளும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவினர் வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்