search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷிய வாலிபர்
    X

    ரஷிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷிய வாலிபர்

    • எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மகா தீபத்தின் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையிலான வனத்துறையினர் மலை உச்சிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மலையில் கந்தாசிரமம் அருகில் வெளிநாட்டினர் 3 பேர் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதைக் கண்டு அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் ஒருவர் மட்டும் படம் பிடித்ததாகவும் மற்ற 2 பேர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கேமரா வைத்திருந்த நபரை மட்டும் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்து டிரோன் கேமரா, செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய பிரத்யோக கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சரேஜ் (வயது 34) என்பதும், அவர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அருகே உள்ள அண்ணாமலை நகரில் தங்கியிருப்பது. தெரியவந்தது.

    தனக்கு மலை ஏற தடை விதித்து இருப்பது தெரியாது என்றும், தனது யூடியூப் ேசனலில் பதிவிடுவதற்காக படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    மலையின் உச்சியில் டிரோன் கேமரா மூலம் வெளிநாட்டவர் படம் பிடித்த சம்பவத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×