search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    அனக்காவூர் இந்திரா நகர் பொதுமக்கள் வந்தவாசி சாலையில் மறியல் செய்த போது எடுத்த படம்.

    செய்யாறில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    • வேறு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து நடந்தது
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் காலனி, காளியம்மன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது.

    அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், வந்தவாசி சாலையில் குடியிருக்கும் 3 நபர்களுக்கு, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வேறு பகுதியில் வசிப்பவர்க ளுக்கு, பட்டா வழங்கியதை கண்டித்து இன்று காலை 7 மணி அளவில் வந்தவாசி சாலையில் திடீரென்று சாலை மறியல் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் சமரசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    Next Story
    ×