search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா
    X

    குன்னத்தூர் முருகர் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ெபண்கள் பால்குட ஊர்வலம் சென்றபோது எடுத்த படம். 

    குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

    • 17-ம் ஆண்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று 17-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

    6 நாட்கள் நடைபெற்ற விழாவில் முதல் நாள் சந்தன காப்பு அபிஷேகமும், 2-ம் நாள் பன்னீர் அபிஷேகம், 3-ம் நாள் பஞ்சாமிர்தாபிஷேகம், நான்காம் நாள் விபூதி அபிஷேகம், ஐந்தாம் நாள் தயிர் அபிஷேகம், நடைபெற்றன.

    ஆறாவது நாளான இன்று டாக்டர் சிவனேசன் தலைமையில் பால்குடம் ஊர்வலம் போளூர் டவுன் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர் . நாளை (திங்கட்கிழமை) வள்ளி தெய்வானைக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியை கோயில் நிர்வாகிகள் தலைவர் ராமச்சந்திரன், தர்மகத்தா செல்வம், துணை தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியம், என்றும் இறைவன் தொண்டில் மன்னு சுவாமிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதேபோல் போளூர் அருகே உள்ள ஆர் குன்னத்தூர் முருகர் கோவிலில் இன்று பாலாபிஷேகம் நடைப்பெற்றது.

    காளியம்மன் கோவிலில் இருந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கருணா சுவாமிகள் தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று ஆர் குன்னத்தூர் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். இந்த விழா ஏற்பாடுகளை கருணா சாமிகள் செய்திருந்தார்.

    Next Story
    ×