search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
    X

    சேத்துப்பட்டு புதியதாக கட்டப்பட்ட வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் வேளாண்மை துணை இயக்குனர் வடமலை, வேளாண்மை வட்டார உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, மரக்கன்றுகள் நட்ட போது எடுத்த படம்.

    புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    • ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள நிர்மலா நகர் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம். புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டவேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், வேளாண்மை அலுவலர் இலக்கிய, ஆகியோர் மரக்கன்று, அலுவலகத்தில் இனிப்பு, வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திலகவதி செல்வராஜன், ஆரணி வேளாண்மை செயற்பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் மேலாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×