என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- ஆத்திரம் அடைந்த மக்கள் பூட்டு போட்டு பூட்டினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994 முதல் 2022 வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், கடந்த 28 ஆண்களாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குலாலர் சமுதாய மக்கள் நேற்று குயவர் மடத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மடத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து வந்து குயவர் மடத்தினை முற்றுகையிட்டனர்.
அப்போது மடத்தில் தற்போது உள்ள தலைமை 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடத்தின் முன்பக்கம் இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூட்டு மற்றும் சங்கிலி வாங்கி வந்து பூட்டு போட்டு பூட்டினர்.
தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது அவர்கள் திருவண்ணாமலை தாலுகா நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் திருவண்ணாமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.