search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்பு- 18-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்பு- 18-ந்தேதி தொடங்குகிறது

    • வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.
    • பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    குரூப்-4 தேர்வு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வை நடத்துகிறது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 18 வயது முதல் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 42 வயது வரையிலும் எழுதலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த அனைத்து பிரிவினரும் இந்த தேர்வை 60 வயது வரையிலும் எழுதலாம்.

    பயிற்சி வகுப்புகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 எழுத்துத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 18-ந்தேதி முதல் தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அனுபவமிக்க வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,000 ஆகும்.

    விடுதிகள்

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விடுதியில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700 பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.7,000-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி.-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாக பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.

    தொலைபேசி எண்கள்

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஸ் ரெஜீ லா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×