search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களுக்கு மானிய  கடன் உதவி வழங்க வேண்டும்- அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் கோரிக்கை
    X

    தொழிலாளர்களுக்கு மானிய கடன் உதவி வழங்க வேண்டும்- அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

    • அகில இந்திய அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின்மாவட்ட மாநாடு கே.டி.சி. நகரில் நடைபெற்றது.
    • கட்டுமான பொருட்களான மணல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழக கட்டிட தொழி லாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் மற்றும் அகில இந்திய அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட மாநாடு கே.டி.சி. நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தின் மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் வேலு, துணைத் தலைவர் கோவிந்தன், மாநில பொருளாளர் பேச்சியப்பன், மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது கட்டுமான பொருட்களான மணல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்ப டுத்தி தொழில் பாதிப்பின்றி நடைபெற வலியுறுத்தப்பட்டது.

    ஆட்டோ தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் கடன் உதவி வழங்க வேண்டும்.

    பென்ஷன் தாரர்களுக்கு ஓய்வூதிய தொகை ஆயிரத்திலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய தொகை ரூ.500-ஐ ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×