search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 15 வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி - பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்

    சாத்தான்குளத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 15 வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி - பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

    • கூட்டத்தில் சாத்தான்குளம் பஸ் நிலையம் புதியதாக அமைக்க ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதையடுத்து பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக கடைகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது.
    • சாத்தான்குளம் பேரூராட்சிக்கு சிறப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறப்பூரில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியம்மாள், செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் ஆறுமுகம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சாத்தான்குளம் பஸ் நிலையம் புதியதாக அமைக்க ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக கடைகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்தில் புதிய கடைகள் கட்டியதும் பேரூராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வர்களை தவிர தற்போது கடை நடத்தி வரும் அனை வருக்கும் வணிக கடைகள் வழங்குவது, சாத்தான்குளம் பேரூ ராட்சிக்கு சிறப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறப்பூரில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அதில் போர்க்கால அடிப்படையில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பது, புதியதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ண ப்பித்த 1,500 பேருக்கு 3 மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்குவது, தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு பேரூராட்சி 15 வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னராக தேர்வு பெற்றுள்ள முன்னாள் பேரூராட்சித் தலைவரும், 4-வது வார்டு உறுப்பினரு மான ஜோசப்பிற்கு வாழ்த்து தெரி விக்கப்ப ட்டது. கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் சுந்தர், ஞானஜோதி கிறிஸ்து மஸ், ஜோசப் அலெக்ஸ், ஜோசப், ஜான்சிராணி, ஸ்டேன்லி, லிசா, இந்திரா, மகாராஜன், தேவனேசம், மகேஸ்வரி, கற்பகவள்ளி, லிங்கபாண்டி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×