search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர், வடமதுரை பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி  குப்பையில் வீசிச்சென்ற விவசாயிகள்
    X

    விலை கிடைக்காததால் சாலையோரம் வீசப்பட்டுள்ள தக்காளி.

    அய்யலூர், வடமதுரை பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி குப்பையில் வீசிச்சென்ற விவசாயிகள்

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.3 முதல் ரூ.5வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. தினசரி மாலை நடைபெறும் இந்த சந்தையில் சுற்றுவட்டார கிராமங்களான மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் வடமதுரை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்த நிலையில் விலை கடுமையாக வீழ்ச்சிஅடைந்துள்ளது.

    வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது.

    இதனால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.3 முதல் ரூ.5வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் தக்காளி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும், சாஸ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே அதிகாரிகள் இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மேலும் தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் ஆய்வு செய்து நஷ்டஈடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×