search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் -மாநகராட்சி கமிஷனர் தகவல்
    X

    சிவகிருஷ்ண மூர்த்தி

    மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் -மாநகராட்சி கமிஷனர் தகவல்

    • நகர் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலப்பாளையம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி இந்த சிறப்பு மருத்துவ சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்கில் வசித்துவருபவர்கள், குடிசை வாசிகள், சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற தொழில் செய்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தினை மேம்ப டுத்து வற்காக நகர் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சேவைகளை வழுபடுத்தும் விதமாக நகர்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை உகந்த நேரத்தில் வழங்கிடவும், நோய் பாதிப்புகை கண்டறியவும், தலைமை மருத்துவமனையில் காத்தி ருப்பு நேரத்தை தவிர்க்கும் நோக்கில் 2017ம் ஆண்டு முதல் பாலி கிளினிக் என்ற மாலை நேர சிறப்பு திட்டம் பேட்டை, பாட்டப்பத்து ஆகிய பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    பாலி கிளினிக் சிறப்பு திட்டத்தில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண்/ பிசியோ தெரபி மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகியவவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 4.30 முதல் 8.30 வரை குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்களால் மருத்துவ சேவை வழங்கப்பட இருக்கிறது.

    அதன் படி திங்கட்கிழமை களில் பொது மருத்துவம், செவ்வாய் மகப்பேறு மருத்துவம், புதன் கிழமைகளில் குழந்தைகள் நல மருத்துவம், வியாழன் தோறும் கண் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம், வெள்ளிக்கிழமைகளில் தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவமும், சனிக்கிழமை தோறும் மன நல மருத்துவ சேவைகளும் அளிக்கப்பட இருக்கிறது.

    மேலப்பாளையம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி இந்த சிறப்பு மருத்துவ சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×