என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்2 Feb 2023 12:58 PM IST
- நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வாழப்பாடி:
ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்–பாளையம் சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா உத்தரவின் பேரில், பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் அன்பு–செழியன் தலைமையிலான வருவாயத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் மணல் கடத்திச் சென்ற ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது டிராக்–டரை பறிமுதல் செய்து, ஏத்தாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் சுப்பிர–மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×