search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நுண்ணுயிர் கூடம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நுண்ணுயிர் கூடம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

    • குப்பைகளை மறுசுழற்சி செய்ய நுண்ணுயிர் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • நுண்ணுயிர் கூடம் அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஏராளமான ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினசரி 0.7 மெட்ரிக்டன் குப்பைகள் வருகிறது.

    இவற்றை தரம்பிரித்து மறுசுழற்சி செய்வதிலும், ஊழியர்கள் பற்றாக்குறையும் மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே பஸ்நிலையத்தில் சேலம் பஸ் நிற்கும் இடத்தில் நுண்ணுயிர் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்மூலம் குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக இன்று ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகளுக்கான ஆயத்தம் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் அங்கு திரண்டனர். தங்களுக்கு வியாபாரம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் நுண்ணுயிர் கூடம் அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×